நல்ல பழக்கத்தை வளர்த்திடு
- நம்மை நாம் சிறந்தவனாக மாற்ற சின்ன சின்ன செயல்களில் கூட அலட்சியமற்று , செயலாற்ற வேண்டும்.
- ஒவ்வொரு சிறு செயலிலும் சரியான முடிவெடுத்து முழுமனதுடன் செயலாற்ற வேண்டும்.
- வெற்றி தொல்வி அடைவதை விட, அதை எதிர்ப்பார்த்துக்கொண்டே இருப்பதைவிட, அதற்க்கான பாதையில் ஒழுக்கமாக அனுபவித்து பயனிப்பதே அழகானது.
- வெற்றியை உருவாக்க நல்ல பழக்கங்களை உருவாக்கு, தொல்வியை தவிர்க்க தீய பழக்கங்களைத் தவிர்த்திடு.
- நம்மைச் சுற்றிலும் நமக்குத் தேவையானவை கண்களில் அடிக்கடி தென்படும்படி வைத்திரு.
- எதை எடுத்தாலும் அதற்க்கு 100% ஆர்வத்துடன் பதில் கொடு, மிகப்பெரிய செயலைக்கூட சிறு கூறுகளாக உடைத்து, அதில் எது எளிமையாக முடியும் என்பதையறிந்து அதை கையிவேடுத்து முடித்துவிடு.
- நமது செயலில் நமக்கு மனநிறைவு இருக்கும் போது , மாற்று செயலைத் தேடி மனம் ஓடாது வாடாது.
- நமது வாழ்கைக்கு ஏற்ப, நாம் நமது வழித்தடத்தை அமைத்திட வேண்டும்.
