🙂கண்ணுக்கு முன்னாடி எண்ணெய் ஊற்றி, காய்கறிகளை வெட்டி, வீட்டில் அரைத்த மாவினைக் கொண்டு பஜ்ஜி, போண்டா போட்டு தரும் , நம்ம ஊரு வியாபாரிகள் விற்பது விஷமா?
🙂 எந்த எண்ணெய், காய்கறினு தெரியாது, எப்படி செய்தார்கள் என்று தெரியாது, எப்பொது செய்ததுனு தெரியாது, கெட்டுப் போகக்கூடாதுனு சேக்கர கேடுகெட்டுப்போன கெமிகல்ஸ் என்னனு தெரியாது, ஒருமுறை சாப்பிட்டால் திரும்ப திரும்ப சப்பிட தோனனும்னு சுவைக்காக சேர்க்கப்படும் போதைப் பொருள் என்னனு தெரியாது, இப்படி குறைகள் சொல்லிக்கிட்டே போகலாம் அப்படிபட்ட விஷம் நமக்கு அமிர்தம்மா?
🙂 TVலயும் திரும்பர இடத்துலயும் திரும்ப திரும்ப விளம்பரம் பண்ணி வலைவிரித்து நம்மை விழவைக்கிறார்கள் வீழ்ந்துவிடாதிர்கள்.
🙂 உலக மக்களே உற்பத்தியாளர்களாகுங்கள்.
உங்களின் தேவைகளை நீங்களே உற்பத்தி செய்யுங்கள்.
🙂 எல்லா கார்ப்பரேட் உணவு பொருட்களும் விவசாய பொருட்களைக் கொண்டுதான் உருவாக்கப்படுகிறது. ஆனால் விவசாயிக்கோ 10 ரூபாய் முதலீடு செய்து, செலவு செய்தால் 4 ரூபாய் மட்டுமே லாபம் வரும்.அதற்கும் குடும்ப நலத்திற்க்காக பல செலவு வரும்.
🙂 விவசாயத்தில் தனி ஒரு நபர் பயிர் வைத்து முதல் வைத்து கஷ்டப்பட்டு விளைந்த பயிரை விதைக்கு போக மீதியை எங்காவது விற்றி லாபம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை நடக்கிறது.
🙂 கார்பரேட்டில் சரியான சூத்திரத்தைப் (formula) போட்டு, திட்டம் தீட்டி, லாபம் எது ,நஷ்டம் எது அறிந்து நஷ்டத்தை லாபமாக்குவது எப்படி என்று சிந்தித்து , செலவுகளை குறைத்து உற்பத்தியை உயர்த்துவது எப்படி என சிந்தித்து. ஒரு நபர் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முதலீடு செய்து, ஒரு சிறுதொழிலை தொடங்கி வெற்றிகரமாக போட்ட திட்டத்தை விட அதிக லாபம் கிடைக்கிறதா என்பதை கவனித்து பிறகு நிலையை அறிந்து பல முதலீட்டாலர்களிடம் பங்கு(Share) வாங்கி தொழிலை உலக முழுவதும் பெரிது பண்ணி பல விளம்பரம் செய்து பிறகு விளம்பரத்திற்க்கு செலவு, தொழில் செலவு, பங்குதாரர்களுக்கு முதலீடில் பங்கு , தனக்கும் பங்கு என பல கோடிக்கு மேற்பட்ட பணத்தை சரியான முறையில் கையாளுகிறார்கள். ஆனால் விவசாயிகளுக்கு இது எல்லாம் தெரியாது அவர்களுக்கு தெரிந்தது உண்மையான உழைப்பு, தரமான உற்பத்தி, அத எங்கயாவது தள்ளிவிட்டு பணமா மாத்திடனும்ற ஆசை.
🙂 மக்களே நேரடியாக விவசாயிகளிடம் பயிர் வாங்கி பயன்படுத்துங்கள் கஷ்டமாகதான் இருக்கும் ஆனால் தரமும், உழைப்பும், ருசியும், உங்களின் கை பக்குவமும், உடல் வலிமையும், மன வலிமையும், உலகமே சோர்கமாக இருக்கும். விவசாய மக்களே வியபாரம் அறிந்திடுங்கள். உலகம் எனக்கு எது தேவையே அதை விரும்புவதில்லை, அதை அடையக்கூடிய பணத்தையே விரும்புகிறது. காரணம் வியாபாரம்.
🙂உலகம் எனக்கு எது தேவையே அதை விரும்புவதில்லை, அதை அடையக்கூடிய பணத்தையே விரும்புகிறது. காரணம் வியாபாரம்.
🙂 நமக்கு உண்மையாகவே நன்மை செய்ய சில கார்ப்ரேட் நிறுவனம் இருக்கிறது அதை பயன்படுத்துங்கள். ஆனால் நன்மை என்ற பெயரில் உணவில், உடையில், வாகனத்தில் நம் நாட்டு வளத்தை சுரண்டும் கார்ப்ரேட்டை பயன்படுத்தாதிர்கள்,அதுவே அழியும்.
🙂நேரடியாக விவசாயிகளிடம் நாம் ஒவ்வொருவரும் வியாபாரம் செய்தால் , நேரடியாக விவசாய மக்களே நீங்களே அரிசியை மாவாகவோ, இட்லி தோசையாகவோ கொஞ்சம் வியபாரம் செய்தால் நிறைய லாபம் கிடைக்கும்.
வியாபாரி ஆகுங்கள்
February 14, 2021
0